UAE Tamil Web

இன்று துவங்கும் ஷார்ஜா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் – வாங்கும் பொருட்களுக்கு 75% வரையில் தள்ளுபடி..!

shopping

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷார்ஜா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் இன்று துவங்கியிருக்கிறது. 48 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த பிரம்மாண்ட திருவிழாவில் 75 சதவீதம் வரையில் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவின் சில்லறை வர்த்தக ஸ்தாபனங்கள் இந்த தள்ளுபடித் திருவிழாவில் பங்கேற்கின்றனர். இதன்மூலமாக உள்ளூர் சில்லறை வர்த்தகம் செழிக்கும் என நம்பப்படுகிறது.

ஜனவரி 31, 2022 ஆம் தேதியுடன் இந்த திருவிழா முடிவடையும் எனவும் ஷாப்பிங் செய்யும் மக்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள் கிடைக்கவும் வாய்ப்பு கிட்டும் என இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் ஷார்ஜா வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உணவு கண்காட்சி, குடும்பங்களுக்கான விளையாட்டுகள் என உங்களது நேரத்தினை பயனுள்ள வகையில் செலவிடவும் இங்கே பல்வேறு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஷார்ஜாவில் உள்ள ஷாப்பிங் மால்கள் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்களில் நீங்கள் இந்த தள்ளுபடிக் கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap