UAE Tamil Web

அரசு ஊழியர்களுக்கு இலவச எக்ஸ்போ டிக்கெட் : அஜ்மான் அரசு உத்தரவு..!

Expo-2020-Dubai--Inside-the-UAE-Pavilion_

அஜ்மான் சுற்றுலா மற்றும் மேம்பாட்டுத துறையின் தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் அல் நுவைமி தனது சொந்த செலவில் 1000 துபாய் எக்ஸ்போ டிக்கெட்களை வாங்கியிருக்கிறார். இதனை அஜ்மான் அரசு ஊழியர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகப் பிரபலமான எக்ஸ்போ 2020 ஐக் காண விரும்பும் அரசுத்துறை ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில்,”இந்த அனுபவத்தை அஜ்மான் அரசாங்க ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறோம்” என்றார்.

துபாய் எக்ஸ்போ 2020 ன் டிக்கெட் விலை விபரம்

  • ஒருமுறை மட்டும் செல்வதற்கு – 95 திர்ஹம்ஸ்
  • ஆறு மாதத்திற்கான பாஸ் வாங்க – 495 திர்ஹம்ஸ்
  • 18 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எந்த நேரத்திலும் இலவசமாக அரங்கினுள் நுழையலாம். இவர்களுடன் வருபவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.
  • பலமுறை உள்ளே செல்வதற்கான பாஸ் வாங்க – 195 திர்ஹம்ஸ் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Expo-2020-Dubai--Inside-the-UAE-Pavilion_
0 Shares
Share via
Copy link