UAE Tamil Web

மனிதாபிமான ஆர்வலர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா – துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு..!

sheikh Mohammed

அமீரகத்தில் மனிதாபிமான முன்னோடிகளாகத் திகழும் நபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கப்படும் என அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருக்கிறார்.

இன்று உலக மனிதாபிமான நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, துபாய் ஆட்சியாளர் இந்த விசேச அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” இந்நாடு உருவானதிலிருந்து 320 பில்லியன் திர்ஹம்ஸ் தொகையை மனிதாபிமான செயல்களுக்காக அளித்திருக்கிறது. இந்நாட்டைக்குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்களுடைய நிறுவனங்கள், சர்வதேச மனிதாபிமான அமைப்புகளால் பெருமை கொள்கிறோம். அமீரகம் வர்த்தக தலைநகரம் மட்டுமல்ல; மனிதாபிமானத்தின் தலைநகரமும் தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

sheikh Mohammed
1 Share
Share via
Copy link