அமீரகத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். அகமது காசிம் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இதனையடுத்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் டாக்டர். அகமது காசிம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பில்,” பல்லாண்டுகாலம் மருத்துவ சேவை வழங்கிவந்த அகமது காசிம் அவர்களுக்கு இறைவன் தனது சொர்க்கத்தில் இடம் கொடுக்கட்டும்” என உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
تعازينا لأسرة الدكتور أحمد كاظم .. أول طبيب إماراتي في الدولة .. خمسة عقود من عمره بذلها في خدمة الناس وعلاجهم ومداواة آلامهم … له منا كل الثناء والتقدير .. ونسأل الله له أن يجزيه الخير ويسكنه الجنة .. آمين pic.twitter.com/EK8ulP1tYf
— HH Sheikh Mohammed (@HHShkMohd) October 11, 2021
பாம்பே பல்கலைக்கழகத்தில் MBBS முடித்த காசிம் டிரினிடாட்-ல் அவசரப் பிரிவு அலுவலராக 1955 ல் தனது மருத்துவப் பயணத்தைத் துவங்கினார்.
எடின்பர்க்-ல் 1958 ஆம் ஆண்டு FRCS பட்டம் பெற்றவுடன் மீண்டும் டிரினிடாட்-ல் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகச் சேர்ந்தார்.
1977 ஆம் ஆண்டு ரஷீத் மருத்துவமனையில் சிறப்பு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்ததன் மூலம் அமீரகம் திரும்பினார் காசிம்.
பின்னர், துபாய் மருத்துவமனையில் எலும்பியல் பிரிவு துவங்கப்பட்டதும் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் காசிம். 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரையில் அப்பதவியை அவர் அலங்கரித்தார்.
நெடுகாலம் அமீரகத்தில் மருத்துவ சேவைகளை வழங்கிவந்த டாக்டர். அகமது காசிமின் இழப்பு அமீரக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
