UAE Tamil Web

ஈரான் நடுக்கடலில் மூழ்கிய அமீரக சரக்கு கப்பல்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்ட அதிகாரிகள்!

அமீரக சரக்கு கப்பல் ஈரான் கடற்கரையில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த கப்பலில் 30 மேற்பட்டோர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் Assaluyeh துறைமுகத்தில் இருந்து 30 மைல் தொலைவில் அமீரகத்தின் கப்பல் சென்று கொண்டிருந்த போது மூழ்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கப்பலில் இருந்து 30 பேரும், லைப் ஜாக்கெட்டுடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் பாரசீக முதல் வளைகுடா பகுதியில் மோசமான வானிலை நிலவி வருவதாக ஈரான் வானிலை மையம் தெரிவித்தது. இந்த மோசமான வானிலையே கப்பல் மூழ்கியதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கப்பலை மீட்க ஹெலிகாப்டர் உதவியை கோரியுள்ளோம், மீட்பு கப்பல்களுடன், இரண்டு கப்பல்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது என அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap