UAE Tamil Web

அமீரக விமானப் படையில் இணைய இருக்கும் உலகின் பவர்புல்லான 80 போர் விமானங்கள் – கையெழுத்தான ஒப்பந்தம்..!

Rafale_F4_

பிரான்சு நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அரசு முறைப் பயணமாக அமீரகம் வந்திருக்கிறார். அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதபப்டையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரான்ஸ் அதிபரை வரவேற்றார்.

இருநாடுகளுக்கிடையே பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முக்கியமானது ரஃபேல் F4 ரக விமானங்களை பிரான்ஸிடம் இருந்து அமீரகம் வாங்குவதாக அறிவித்திருக்கிறது. மொத்தம் 80 விமானங்கள்.

இதன்மூலம் பிரான்சைத் தவிர்த்து அதிநவீன ரஃபேல் F4 விமானங்களை வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை அமீரகம் பெறுகிறது. பிரான்சின் பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் இந்த ரஃபேல் F4 விமானங்களை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap