UAE Tamil Web

மஹ்சூஸ் டிரா: 10 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்ற 6 இந்தியர்கள்..!

mahooz draw

சமீபத்தில் நடந்து முடிந்த மஹ்சூஸ் போட்டியின் 20 வது வார டிராவில் 10 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை 6 இந்தியர்கள் வென்றுள்ளனர். இந்த ஆறு பேரில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்களாகும்.

69 வயதான ராபர்ட் கடந்த 40 வருடங்களாக அமீரகத்தில் வசித்துவருகிறார். தற்போது குவாரண்டைனில் இருக்கும் அவருக்கு இந்தப் பரிசு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டபோது,” எனது நண்பர்கள் அவ்வப்போது இப்போட்டியில் கலந்துகொள்வார்கள். ஆகவே நானும் இம்முறை முதன்முதலில் முயற்சித்தேன். வெற்றிபெற்றுவிட்டேன். குவாரண்டைனில் இருக்கும் எனக்கு இது பெருமகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

இவருடைய இரண்டு பெண்களில் ஒருவர் அமெரிக்காவிலும் மற்றொருவர் அபுதாபியிலும் வசித்து வருகின்றனர். தனது மகளின் திருமணத்திற்கு இப்பணத்தைப் பயன்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“அனைவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள். எப்போது அதிர்ஷ்டம் உங்களுடைய கதவுகளைத் தட்டும் எனத் தெரியாது. மஹ்சூஸ் டிராவிற்கு நன்றி” என ராபர்ட் தெரிவித்தார்.

இவருடைய நண்பரும் கேரளாவைச் சேர்ந்தவருமான முகமது (35) அவர்களும் இப்போட்டியில் பரிசுத்தொகையை வென்றுள்ளார். கடந்த 12 வருடங்களாக மத்திய கிழக்கில் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் முகமது இப்பணத்தைக் கொண்டு தனது கடன்களை அடைக்க இருப்பதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்குப் பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற 6 பேரில் கேரளாவைச் சேர்ந்திராத இப்ராஹீம் அப்துல் உம் அல் குவைனில் தனது குடும்பத்தினரோடு வசித்துவருகிறார். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் 34 வயதான அப்துல் இதுகுறித்துப் பேசுகையில்,”இந்த வெற்றி குறித்து நான் அறிந்த உடனேயே அடுத்த சில மாதங்களுக்கு வீட்டு செலவுகளுக்கு கவலையில்லை எனத் தோன்றியது” என்றார்.

மஹ்சூஸ்-ன் அடுத்த டிரா ஏப்ரல் 17 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு நடக்க இருக்கிறது. பங்கேற்க விரும்புபவர்கள் www.mahzooz.ae  என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 35 திர்ஹம்ஸ் மதிப்புள்ள அல் எமராத் வாட்டர் பாட்டிலை வாங்கவும். ஒவ்வொரு பாட்டிலிலும் இப்போட்டியில் பங்கேற்பதற்கான எண்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

mahooz draw
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap