UAE Tamil Web

6 மாத சிறப்பு விசா – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கட்டணம் எவ்வளவு?

visa

அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் 6 மாதத்திற்கான விசா சேவையை துவங்கியுள்ளது. கோல்டன் விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் அமீரகம் வந்து அதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விசாவினைப் பயன்படுத்தி பலமுறை அமீரகத்திற்கு வந்துசெல்லலாம்.

- Advertisment -

அதிகமாக பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்படும் இந்த விசாவினைக்கொண்டு கோல்டன் விசா குறித்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

இந்த ஆறுமாத கால விசாவிற்கான கட்டணமாக 1,150 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதனை ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளலாம்.

கோல்டன் விசாவைப் பெற முயற்சிப்பவர்கள் அதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே இந்த விசாவானது வழங்கப்படுகிறது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த ஆறுமாத விசா பெற தகுதிபடைத்தவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • பொது முதலீடுகள் அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீட்டாளர்கள்
  • தொழில்முனைவோர்
  • மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள்
  • கண்டுபிடிப்பாளர்கள்
  • பி.எச்.டி முடித்தவர்கள்
  • விளையாட்டு வீரர்கள்
  • கலாச்சாரம் மற்றும் கலை ஆகியவற்றில் நிபுணர்கள்
  • முன்னணி அறிவியல் துறைகளில் நிபுணர்கள்
  • பொறியியல் மற்றும் அறிவியலில் வல்லுநர்கள் (தொற்றுநோய் மற்றும் வைரஸ்கள், செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, கணினிகள், மின்னணுவியல், நிரலாக்க, மின், மரபியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம்)
  • சிறந்த மாணவர்கள் (உயர்நிலைப்பள்ளி அல்லது பல்கலைக்கழகம்)

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த சேவைக்காக விண்ணப்பிப்பவர்கள் ICA வின் இணையதளத்தை நாடவும்.

உங்களுடைய தகவல்களை பிழையின்றி உள்ளீடு செய்யவும். முழு பரிசோதனைக்குப்பின் கட்டணத்தை செலுத்தவும்.

திருத்தம் கோரி விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டால் 30 நாட்களுக்குள் சரியான தகவல்களுடன் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். தவறினால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.

மூன்று முறை விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டால் அது தானாகவே ரத்தாகும். விண்ணப்பதாரர் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.