UAE Tamil Web

உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வருகின்றது Strawberry Supermoon.. அமீரக வாசிகளே மிஸ் பண்ணிடாதீங்க – ஆமா எப்போது இந்த நிலவு தோன்றும்?

அமீரகத்து வானை நீங்கள் அன்னார்ந்து பார்த்து பிரம்மிக்கும் விஷயமொன்று நாளை நடைபெறவிருக்கிறது, சிவப்பு வண்ணம் லேசாக கலந்து நம் கண்களுக்கு விருந்தளிக்க வருகின்றது Strawberry Supermoon. நாளை ஜூன் 14ம் தேதி அமீரகத்தில் இந்த அதிசயத்தை நம்மால் பார்க்கமுடியும்.

உண்மையில் நிலா இளஞ்சிவப்பு நிறமாக மாறுமா?

அதன் பெயர் Strawberry Supermoon என்றபோதும் இது நிலவின் நிறத்தில் ஏற்படும் மாற்றமல்ல, மாறாக அடிவானத்தில் நிலா உதிக்கும்போது அது சூரியனின் இளஞ்சிவப்பு நிறத்தை பெறுகின்றது என்று துபாயை தளமாகக் கொண்ட அல் துரையா வானியல் மையம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

“ஜூன் மாதம் தோன்றும் இந்த முழு நிலவு, பூர்வீக அமெரிக்க பழங்குடியினரால் சேகரிக்கப்படும் இந்த காலகட்டத்தில் சேகரிக்கப்படும் காட்டு ஸ்ட்ராபெர்ரிகளின் நிறத்தில் இருப்பதாலேயே அவ்வாறு பெயர்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Berries Ripen, Green Corn மற்றும் Hot Moon என்றும் இந்த நிலவுக்கு வேறு சில பெயர்கள் உண்டு, அமீரக வானத்தில் நாளை ஜூன் 14 அன்று பிரகாசமான இந்த நிலவு தெரியும். நீங்கள் நிமிர்ந்து பார்த்து ‘வாவ்’ என்று நிச்சயம் சொல்வீர்கள்.

அல் துரையா மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை சிறப்பு கட்டண நிகழ்வை நடத்துகிறது. இது ஒரு விரிவுரை, ஒரு கேள்வி-பதில் அமர்வு, வான நிகழ்வைப் பற்றிய பொதுவான கவனிப்பு மற்றும் தொலைநோக்கி மூலம் விரிவான பார்வை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap