UAE Tamil Web

பேருந்தில் தூங்கிய 3 வயது சிறுவன்; மூச்சுத் திணறி இறந்த சோகம் – சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்ய உத்தரவு..!

bus

அஜ்மானில் உள்ள திறன் மேம்பாட்டு மையம் ஒன்றில் ஜூலை 12 ஆம் தேதி வழக்கம்போல மையத்திற்குச் சொந்தமான பேருந்தில் மாணவர்கள் வந்து இறங்கத் துவங்கினர். அப்போது பேருந்தினுள் 3 வருடம் மற்றும் 8 மாத வயதுடைய சிறுவன் ஒருவன் தூங்கிக்கொண்டிருக்க, பேருந்து சூப்பர்வைசர் அவனைக் கவனிக்கத் தவறிவிட்டார்.

அனைத்து மாணவர்களும் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டதாக நினைத்து பேருந்தின் கதவுகளும் மூடப்பட்டுள்ளன. உணவு இடைவேளையின்போது சூப்பர்வைசர் பேருந்திற்குத் திரும்பும்போதுதான் விபரீதத்தை உணர்ந்திருக்கிறார். பேருந்தின் உள்ளே மயக்கநிலையில் கிடந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான்.

இருப்பினும் பேருந்தினுள் இருந்த வெப்பம் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய அஜ்மான் காவல்துறை செயல்பட்டுப் பிரிவின் தலைமை இயக்குனர் பிரிகேடியர் அப்துல்லா சைஃப் அல் மட்ரோஷி,” கடந்த ஜூலை 12 ஆம் தேதி அமினா மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அரபு சிறுவன் ஒருவன் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது” என்றார்.

மேலும் அந்த திறன் மேம்பாட்டு மையத்தின் உரிமம் கடந்த வருடமே காலாவதியாகிவிட்டதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து அந்த சூப்பர்வைசர், பேருந்து ஓட்டுனர் மற்றும் மையத்தின் மேலாளர் ஆகியோரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

bus
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap