UAE Tamil Web

அமீரகத்தின் Souk நிறுவனம்.. ஜூன் 23 முதல் துவங்கும் “கலக்கல் Offer” – எலக்ட்ரோனிக் பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி!

அமீரகத்தில் கடந்த ஜூன் 9 முதல் வரும் 19 தேதி வரை டெய்ரா தீவுகளில் உள்ள Souk Al Marfa நிறுவனம் அதன் மெகா மளிகை பொருட்கள் விற்பனையை நடத்தி வருகின்றது. இதன் மூலம் அமீரகத்தில் வசிப்பவர்கள் மற்றும் இங்குள்ள வெளிநாட்டவர்கள் அதிசிறந்த டீல்களைப் பெற்று வருகின்றனர்.

ஃபக்ருதீன், மொஹிதீன், ஃபால்கன், சாஃப்கோ, ஸ்பைர் இன்டர்நேஷனல், ஒமேகா ஸ்பைசஸ், ரஷித் ஷபீர் போன்ற 39 முக்கிய மொத்த விற்பனைக் கடைகளில் இருந்து மளிகை பொருட்கள், மசாலா பொருட்கள், அரிசி, சோப்புகள், ஷாம்பு மற்றும் இதர வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் 50% வரையிலான தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

மேலும் ஜூன் 23 முதல் ஜூலை 9 வரை சூக் அல் மர்ஃபாவின் வருடாந்திர மெகா சூக் விற்பனையையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஃபேஷன் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வாசனை திரவியங்கள், தோல் பராமரிப்பு மற்றும் பல வகையான (தேர்ந்தெடுக்கப்பட்ட) பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

Souk Al Marfaன் புதிய செயல்பாட்டு நேரமானது ஞாயிறு முதல் வியாழன் வரை நண்பகல் முதல் நள்ளிரவு வரை செயல்படும். மேலும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும், அதேபோல சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை செயல்படும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap