UAE Tamil Web

இஸ்ரேலியர்களுக்கு அமீரக சுற்றுலா விசா வழங்கும் பணிகள் துவக்கம்..!

Israel UAE

இஸ்ரேலிய குடிமக்களுக்கு அமீரக சுற்றுலா விசா வழங்கும் பணிகள் துவங்கியுள்ளதாக அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

- Advertisment -

இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஆப்ரஹாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நுழைவு விசாக்களை பரஸ்பரம் விலக்குவதற்கான ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வரை சுற்றுலா விசாக்கள் விமான நிறுவனங்கள், பயண மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் என அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.