UAE Tamil Web

அபுதாபியில் ட்ரோன்கள் பயன்படுத்த தடை… எச்சரிக்கைவிட்ட அமைச்சகம்..!

அபுதாபியில் ட்ரோன்கள் மற்றும் சாகச விளையாட்டு விமானங்கள் பறக்க உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

ட்ரோன் கேமராக்கள் மற்றும் சாகச விளையாட்டு விமானங்களை தவறாகப் பயன்படுத்த அபுதாபி உள்துறை அமைச்சகம் தடை உத்தரவு பிறபித்துள்ளது. அமீரக தலைநகர் அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அட்னாக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17 ஆம் தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.  இதில், எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தான் நாட்டவர் என 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் ட்ரோன் கேமராக்கள் மூலம் படப்பிடிப்புகளை நடத்தவிருக்கும் நிறுவனங்களும், விளம்பர நிறவனங்களும் தேவையான அனுமதிகளைப் பெற்றால் மட்டுமே பணிகளை தொடர முடியும். அனுமதியின்றி அமைச்சகத்தில் உத்தரவுகளை புறக்கணிப்பவர்கள் சட்டச் சிக்கல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap