ஏமன் நாட்டின் தலைநகரமான ஏதேனில் உள்ள விமான நிலையத்திற்கு நேற்று சவூதி அரசின் ஆதரவு பெற்ற ஏமனின் புதிய கேபினட் குழு வருகை புரிந்தது. இந்நிலையில் திடீரென விமான நிலையத்தை ஹௌதி தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்த கோர தாக்குதல் காரணமாக குறைந்தபட்சம் 20 பேர் மரணமடைந்திருக்கலாம் எனவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், ஏமன் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எட்டப்பட்ட ரியாத் ஒப்பந்தத்தின்படி ஏமனில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் புதிய கேபினட் குழு மற்றும் சவூதியைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள் தலைநகரின் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது தாக்குதல் நிகழ்ந்திருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
அமீரகம் கண்டனம்
இது கோழைத்தனமான தாக்குதல் என அமீரகத்தின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், “இந்த தீவிரவாத தாக்குதலைக் கண்டிப்பதோடு, மத நம்பிக்கைகள் மற்றும் மனிதத்திற்கு எதிரான இம்மாதிரியான தாக்குதல்களை அமீரகம் முற்றிலுமாக நிராகரிக்கிறது” என அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹௌதி இயக்கத்தின் சதித் திட்டத்தால் நிகழ்ந்த இம்மாதிரியான தாக்குதல் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், ஏமன் மக்களின் வாழ்வையும் சிதைக்கிறது. சவூதி அரசின் தலைமையின்கீழ் ஏமன் மக்கள் நிலையான வாழ்வினைப் பெறுவதற்கு எதிராக இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டாவது சப்தம்
தாக்குதல் நிகழ்ந்த சிறிதுநேரத்தில் மீண்டும் பலத்த வெடி சப்தம் எழுந்திருக்கிறது. இதற்கான காரணம் எதுவென்று தெரியவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மயீன் அப்துல் மாலிக் மற்றும் ஏமனுக்கான சவூதியின் தூதர் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
வீடியோ
فيديو | إصابة مراسل #الإخبارية عبدالفتاح غلاب في هجوم #مطار_عدن pic.twitter.com/DpGNA4xlcF
— الإخبارية عاجل (@EKH_brk) December 30, 2020
فيديو | آثار الانفجار الذي وقع في #مطار_عدن#الإخبارية_عاجل pic.twitter.com/4xVg62p0e7
— الإخبارية عاجل (@EKH_brk) December 30, 2020
فيديو | محلل سياسي لـ #الإخبارية: سيمضي #اتفاق_الرياض رغم كيد الأعداء pic.twitter.com/FJmujQKqLK
— قناة الإخبارية (@alekhbariyatv) December 30, 2020