UAE Tamil Web

மசூதியின் மீது குண்டுவீச்சு ; 12 பேர் பலி – அமீரகம் கடும் கண்டனம்..!

Bombings

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஈத் அல் பித்ர் சிறப்புத் தொழுகையினால் அந்த மசூதியே களைகட்டியிருந்தது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் இருக்கும் அந்த மசூதியில் அப்படியொரு குண்டுவெடிப்பு நிகழும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பண்டிகை தினத்தில் புத்தாடை உடுத்தி கண்மூடி பிரார்த்தித்துக்கொண்டிருந்த மக்கள், திடீரென கேட்ட வெடிச்சத்தத்தினால் ஆடிப்போயினர். குண்டுவெடிப்புத்தான். அதன்காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தாயிஷ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கோடும் அனைத்து மத மற்றும் விழுமியங்களை சிதைக்கும் எண்ணத்தோடும் நடத்தப்படும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை அமீரகம் உறுதியாக நிராகரிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சகம், காயமடைந்தோர் விரைவில் குணமாக வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளது.

Bombings
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap