UAE Tamil Web

சவூதி அரேபியாவின் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்; பற்றியெரிந்த ஆலை – அமீரகம் கடும் கண்டனம்..!

saudi fire

ஈரான் துணையுடன் இயங்கும் ஹௌதி தீவிரவாதக்குழு நேற்று சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பின்னர், பலமணிநேர போராட்டத்திற்குப் பிறகு இந்த தீயானது அணைக்கப்பட்டது.

இந்நிலையில், அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபிய மக்களின் வாழ்வு, உலக பொருளாதாரம் மற்றும் ஆற்றல் பகிர்மான அமைப்பு ஆகியவற்றினை சீர்குலைக்கும் நோக்கோடு இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக இந்தக் குழுவினால் தொடர்ந்து நடைபெறும் இம்மாதிரித் தாக்குதல்கள் சர்வதேச சட்டம் மற்றும் வழிமுறைகளுக்கு சவால்விடும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

“சவூதி மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் அமீரகம் ஏற்றுக்கொள்ளாது. சவூதிக்கு எப்போதும் எங்களது ஆதரவு உண்டு. சவூதியின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து வருமானால் அது அமீரகத்திற்கு நிகழ்வதைபோலவே கருதப்படும்” என அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

saudi fire
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap