UAE Tamil Web

ஆப்கன் மனித வெடிகுண்டு தாக்குதலில் 60 பேர் பலி – அமீரகம் கடும் கண்டனம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே சக்தி வாய்ந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்தது. இதில் அமெரிக்க படையினர் 12 பேர் உள்பட 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன. அந்த வகையில் அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமீரக அரசு, காயமடைந்த மக்கள் விரைவாக மீண்டு வரவும் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளது. மனித வெடிகுண்டு தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டித்துள்ளதோடு ஆப்கன் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link