UAE Tamil Web

நைஜீரியா : தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் 100 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு – கடும் கண்டனம் தெரிவித்த அமீரகம்..!

terror attack in Nigeria

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதற்கு அமீரகம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.

- Advertisment -

அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இந்த குற்றவியல் செயலுக்கு அமீரகம் கண்டனம் தெரிவிக்கிறது. மத, மனித விழுமியங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரணாக பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் குலைக்கும் நோக்கில் நிகழும் அனைத்து வகையான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தையும் அமீரகம் உறுதியாக நிராகரிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய பிரார்த்திப்பதாக அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.