UAE Tamil Web

ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு பரபரப்பாக இருந்த மார்கெட்டில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல் – 36 பேர் பலி – அமீரகம் கடும் கண்டனம்..!

BOMB BLST

ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு ஈராக்கின் சதர் சிட்டி மார்கெட்டில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அப்போது உள்ளே நுழைந்த தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்க, பலத்த சப்தத்துடன் அது வெடித்துச் சிதறியிருக்கிறது. இந்த கோர தாக்குதலினால் 36 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பலரும் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ஈராக்கில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

“நீதி, மத மற்றும் மனித மதிப்புகளை சிதைக்கும் வகையில் பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைக்கும் எவ்வித வன்முறை மற்றும் தீவிரவாத தாக்குதல்களை அமீரகம் எப்போதும் ஏற்காது. இந்த மோசமான தாக்குதலுக்கு அமீரகம் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறது” என அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலினால் பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

BOMB BLST
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap