UAE Tamil Web

கோவிட்-19 உட்பட நுரையீரல் நோய்களை முன்கூட்டியே கண்டறிய மொபைல் App.! 13 வயது அமீரக மாணவர்கள் அசத்தல்.. எப்படி பயன்படுத்த வேண்டும்.?

app

13 வயதான அமீரக மாணவர்கள் இருவர் புதிதாக ஹெல்த் App ஒன்றை உருவாக்கி உள்ளனர். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கோவிட் -19 உள்ளிட்ட நுரையீரல் நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் வகையில் இந்த App-ஐ உருவாக்கி அசத்தியுள்ளனர் இந்த மாணவர்கள்.

- Advertisment -

இந்த App-ன் இணை நிறுவனரான துபாயில் சிலிக்கான் ஒயாசிஸில் உள்ள ஜெம்ஸ் வெலிங்டன் அகாடமியின் மாணவர் அபிஷேக் சிம்பிலி தங்களது App பற்றி விளக்கம் அளித்துள்ளார். இது ஒரு நபரின் சுவாச முறை மற்றும் நுரையீரல் தொடர்பான பிற நோய்களின் அறிகுறிகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்கள்(machine learning technologies) அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தும். கோவிட் -19 தொற்றை கண்டறியவும் இந்த App-ஐ பயன்படுத்தலாம்.

மேலும் இது நிமோனியா போன்ற வீரியமிக்க அனைத்து வகையான நுரையீரல் நோய்களையும் அடையாளம் காண முற்படுகிறது என்றார்.

எப்படி செயல்படும்.?

இந்த ஹெல்த் App-ஐ உருவாக்குவதில் பங்காற்றிய மற்றொரு மாணவரான ரியான் போல்டி இது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். தங்களது App பயனர்களின் ஒலியை எடுத்து ஒரு படமாக மாற்றும். இந்த படங்களை வைத்து அது நிமோனியாவா, கோவிட் -19 தொற்றா அல்லது சாதாரண சுவாச பிரச்னையா என்பதை எங்கள் ஆப்பில் உள்ள செயற்கை நுண்ணறிவு(artificial intelligence) வகைப்படுத்தும். ஏனெற்றால் ஒலி சுவாச வடிவமைப்பின் படம் எங்களிடம் உள்ளது.

எப்படி பயன்படுத்த வேண்டும்.?

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எங்கள் App வந்த பிறகு அதை தங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின் எங்களது App-ஐ ஓபன் செய்து விட்டு பயனர்கள் தங்களது வாய் அல்லது மூக்கின் அருகே மொபைலை பிடித்து 30 வினாடிகள் சாதாரணமாக சுவாசிக்க வேண்டும்.

இந்த ஆடியோவைப் பதிவு செய்து AI-இன் உதவியுடன் ஒரு படமாக மாற்றுகிறது எங்கள் App.பயனரின் நுரையீரல் செயல்பாட்டில் ஏதேனும் ஒழுங்கின்மை இருப்பின் அதை அந்த படம் காட்டி கொடுத்துவிடும். ஒருவேளை பயனர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்கள் App கண்டறிந்தால், உடனே நோயாளி ஒரு மருத்துவரை பார்க்க அறிவுறுத்தப்படுவார்” என்று அபிஷேக் கூறினார்.