UAE Tamil Web

வந்தாச்சு சிபிஎஸ்இ 10th ரிசல்ட்ஸ் – மாஸ் காட்டிய அமீரக பள்ளி மாணவர்கள்!

இந்தியாவின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. வழக்கம்போல தேர்வெழுதிய அமீரக மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். அமீரக அளவில் அதிகபட்சமாக அபுதாபியைச் சேர்ந்த 2 மாணவர்கள் 99.8% மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளனர். 2ம் இடத்தில் 99.4% மதிப்பெண் பெற்று துபாய் இந்தியன் பள்ளி மாணவி ரிஷப் ருபானி உள்ளார். அதே பள்ளியில் 249 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90%க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதேபோல துபாயைச் சேர்ந்த மில்லினியம் பள்ளி மாணவர் ஹர்ஷ் நாயரும் 99.4% மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

Indian students in UAE shine in CBSE Grade X examination despite virus outbreak - GulfToday

ஷார்ஜா இந்தியன் பள்ளி மாணவி அஞ்சலி தீபு 99.2% மதிப்பெண்களும் துபாயைச் சேர்ந்த டெல்லி பிரைவேட் ஸ்கூல் மாணவி ஐஸ்வர்யா சுந்தரம் 98.8% மதிப்பெண்களும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அமீரகம், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி விகிதம் இதுவரை இல்லாத அளவாக 99.04% ஆக உயர்ந்துள்ளது. இதேபோல 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 90 – 95% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 57,824 மாணவர்கள் 95%க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த முறை சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap