UAE Tamil Web

அமீரகம்: 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை : நெகட்டிவ் வந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி..!

UAE-students-to-take-COVID-19-test-before-exams

அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், கல்வித்துறை அமைச்சகம் எதிர்வரும் 12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவற்றைக் கீழே காணலாம்.

மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், தூய்மை, உணவு வினியோகம் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் ஜூன் 8 மற்றும் ஜூன் 13 ஆம் தேதி தங்களது நெகட்டிவ் PCR பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும். பரிசோதனை அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் வரவேண்டும். தேர்வுக்கு 1 மணிநேரம் முன்னதாக பள்ளி திறக்கப்படவேண்டும்.

பெற்றோர் மற்றும் மாணவர்களின் பாதுகாவலர்கள் பிற மாணவர்களோடு தொடர்புகொள்தல் கூடாது. பள்ளி பேருந்து மற்றும் வாகனங்களில் மட்டுமே அவர்கள் இருக்கவேண்டும். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கு இதில் விலக்கு அளிக்கப்படும்.

பெற்றோர் மற்றும் மாணவர்களின் பாதுகாவலர்களும் கொரோனா பரிசோதனை எடுத்திருக்கவேண்டும்.

ஆசிரியர் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு கொரோனா அறிகுறியோ அல்லது சுவாசக் கோளாறு இருப்பின் அவர்கள் பள்ளிக்கு வருதல் கூடாது.

கொரோனா பாதித்த மாணவர்கள் தேர்வைத் தவிர்க்கவேண்டும். அவர்களுக்கு தனித் தேர்வு பின்னர் நடத்தப்படும். இருப்பினும் கொரோனா பாதித்ததற்கான மருத்துவ அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கொரோனா பாதித்தவர்களோடு நெருங்கி இருந்தவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா நோயாளியுடன் நெருங்கி இருந்ததற்கான ஆதாரத்தை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு அறையிலும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை விதிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாக இருந்த குழந்தைகள் தேர்வு அறையில் அமர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.