UAE Tamil Web

ஆப்கானிஸ்தானில் பதற்றம் – அமீரகத்தில் இருந்து விமான போக்குவரத்து நிறுத்தம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் சுற்றி வளைத்ததால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றத் தொடங்கிய தாலிபான்கள் தற்போது காபூலை சுற்றி வளைத்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார்.

Afghan President Ashraf Ghani's five biggest challenges - BBC News
Credit :Reuters

இதுதவிர தூதரக அதிகாரிகள் மற்றும் சொந்த மக்களை உலக நாடுகள் உடனடியாக விமானம் மூலம் தாயகம் திரும்ப உத்தரவிட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செல்வதற்கான விமான போக்குவரத்தை நிறுத்துவதாக எமிரேட்ஸ்ட் ஏர்லைன்ஸ் மற்றும் Fly Dubai விமான நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன. நிலைமை கட்டுக்குள் வந்ததும் பயணிகளுக்கு விமான போக்குவரத்து குறித்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமீரகத்தில் இருந்து இன்று புறப்பட்ட விமானங்கள் அனைத்து காபூலில் தரையிறங்காமல் வேறு நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பதற்றமான சூழல் கருதி ஆப்கானிஸ்தான் செல்வதற்கான விமான சேவைகளை தொடர்ந்து பல்வேறு விமான நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன

4 Shares
Share via
Copy link