UAE Tamil Web

கடலலையில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் ; சடலமாக மீட்பு – அமீரகத்தில் தொடரும் சோகம்..!

Beach

நேற்று திப்பா அல் புஜைரா கடற்கரைக்கு நீந்தச் சென்ற 18 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் வலிமையான கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து மாலை 5.30 மணிக்கு காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மீட்புப்படை மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றன.

ஒரு சிறுவன் உயிரிழந்ததாகவும் மற்றொருவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

கடற்கரைக்கு நீந்தச் செல்பவர்கள் கவனமுடன் இருக்கவேண்டும் எனவும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் எனவும் காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது.

சமீப காலங்களில் அமீரகத்தில் கடலின் மூர்க்கத்தனத்திற்கு 5 வயது சிறுவன் ஒருவனும் இந்தியாவைச் சேர்ந்த 32 வயதான இளம் தாய் ஒருவரும் உயிரிழந்திருக்கின்றனர். ராஸ் அல் கைமாவில் 17 வயது சிறுவன் ஒருவனும் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான்.