UAE Tamil Web

75% வரையில் தள்ளுபடி; தினந்தோறும் 50 திர்ஹம்ஸ் வெல்ல வாய்ப்பு – லூலூ மாலின் அதிரடி ஆஃபர்..!

RAK Mall

வடக்கு எமிரேட்களில் உள்ள 3 முக்கிய மால்கள் கோடைகால சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளன. இதன்படி நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 75% வரையில் தள்ளுபடி அளிக்கப்பட இருக்கிறது.

ராஸ் அல் கைமா மால், லூலூ மால் புஜைரா மற்றும் மால் ஆஃப் உம் அல் குவைன் ஆகிய மூன்று மால்களிலும் ஸ்பென்ட் & வின் (Spend and Win) எனப்படும் திட்டத்தை உலகளாவிய லாலூ குழுமம் மற்றும் லைன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் & ப்ராபெர்டி (Line Investments & Property) ஆகிய நிறுவனங்கள் துவங்குவதாக அறிவித்துள்ளன.

ஜூலை 15 – ஆகஸ்டு 31 வரை இந்த தள்ளுபடி அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் செய்யும் நபர்கள் தினசரி பரிசுகளின் மூலமாக 50 ஆயிரம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள லாகா கிஃப்ட் வவுச்சர்களை (Laka gift vouchers) வெல்லவும் வாய்ப்பு கிடைக்கும்.

RAK Mall
1 Share
Share via
Copy link