UAE Tamil Web

ட்ரக்கில் மோதிய கார் – 3 இளைஞர்கள் பலி – அமீரகத்தில் சோகம்..!

Youngsters_

உம் அல் குவைனின் அருகில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மோசமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அதிவேகமாகச் சென்ற கார் டிரக்கின் மீது மோதியிருக்கிறது.

இந்த விபத்தினால் காரில் இருந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் தேசிய ஆம்புலன்ஸ் மூலமாக ஷேக் கலீஃபா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும் வழியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் இறந்த மற்றொரு இளைஞர்

Youngster-2
Image Credit: Gulf News

டிரக் டிரைவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் காரணம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷார்ஜாவில் உள்ள ஷஹாபா மசூதியில் மகரிப் தொழுகைக்குப் பின்னர் இறந்தவர்களுக்கு இறுதித் தொழுகை நடைபெற்றது.

Youngsters_
3 Shares
Share via
Copy link