டிஜிட்டல் வரி முத்திரை இல்லா வாட்டர் பைப் புகையிலை, மின்-சிகரெட்டுகளை தடை செய்யும் அமீரகம்.!

digital stamp

‘டிஜிட்டல் வரி முத்திரைகள்’ என்று குறிக்கப்படாத எந்தவொரு வாட்டர் பைப் புகையிலை (அரபு மொழியில் ‘முசெல்’ என அழைக்கப்படுகிறது) அல்லது மின்சாரம் சூடாக்கப்பட்ட சிகரெட் செருகிகளை (electrically heated cigarette plugs) இறக்குமதி செய்வது 2020 மார்ச் 1 முதல் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தடைசெய்யப்படும் என்று மத்திய வரி ஆணையம் (FTA) கடந்த செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது.

‘புகையிலை மற்றும் புகையிலை தயாரிப்புகளை குறிக்கும் திட்டம்’ இரண்டாம் கட்டத்தைத் தொடங்குவதற்கான காலக்கெடுவுக்கு இணங்க இந்தத் தடை உள்ளது என FDA விளக்கமளித்தது. அத்துடன் வணிக மோசடி மற்றும் குறைந்த தரமான தயாரிப்புகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது என்று கூறியுள்ளது.

புகையிலை மற்றும் புகையிலை தயாரிப்புகளை குறிக்கும் திட்டத்தை குறித்த 2018 ஆம் ஆண்டின் அமைச்சரவை முடிவு எண் 42 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த தயாரிப்புகளின் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த அமைப்பை பின்பற்றுமாறு ஆணையம் அழைப்பு விடுத்தது.

உற்பத்தி நிலையத்திலிருந்து நியமிக்கப்பட்ட தயாரிப்புகள், நிர்ணயிக்கப்பட்ட தரங்களையும் அளவுகோல்களையும் பூர்த்திசெய்கின்றன என்பதை உறுதிசெய்து அவை இறுதி நுகர்வோரை அடையும் வரை கண்காணிக்க இந்த டிஜிட்டல் முத்திரைகள் அனுமதிக்கின்றன.

சட்டம் என்ன சொல்கிறது?

மார்ச் 1, 2020 நிலவரப்படி, தீர்மானத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்து நியமிக்கப்பட்ட கலால் பொருட்களும் டிஜிட்டல் வரி முத்திரைகளுடன் குறிக்கப்பட்டாலொழிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என்று FDA முடிவு கூறுகிறது. அதன்பின் ஜூன் 1, 2020 நிலவரப்படி, இந்த தயாரிப்புகள் டிஜிட்டல் வரி முத்திரைகளுடன் குறிக்கப்படாவிட்டால் அவை வழங்கல், பரிமாற்றம், கையிருப்பு அல்லது வைத்திருத்தல் ஆகியவையும் தடை செய்யப்படும்.

ஜெனரல் காலித் அலி அல் புஸ்தானி, ‘புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் குறிக்கும் திட்டத்தின்’ இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவது என்பது வாட்டர் பைப் புகையிலை மற்றும் மின்சாரம் சூடாக்கப்பட்ட சிகரெட் செருகிகளை போன்றியவற்றை இந்த திட்டத்தில் சேர்க்கும் விரிவாக்குதலை உள்ளடக்கிய முதல் கட்டத்தின் தொடர்ச்சியாகும் என்கிறார்.

“வரி வசூலித்தல், வரி ஏய்ப்பை எதிர்த்துப் போராடுவது, வணிக மோசடிகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல், உள்ளூர் சந்தைகளில் இந்த பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க உதவும் எஃப்.டி.ஏவின் முயற்சிகளை இந்த திட்டம் ஆதரிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் அனைத்து வகையான வாட்டர் பைப் புகையிலை மற்றும் மின்சாரம் சூடாக்கப்பட்ட சிகரெட் செருகிகளின் தயாரிப்பாளர்களும் இறக்குமதியாளர்களும் கணினி ஆபரேட்டரிடமிருந்து டிஜிட்டல் வரி முத்திரைகள் வாங்குவதற்கான ஆர்டர்களை பெறலாம். (அவை அதிகாரசபையால் அங்கீகாரம் பெற்றவுடன், தொழிற்சாலையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவற்றை தங்கள் தயாரிப்புகளின் பேக்கேஜிங்கில் வைத்து ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள உள்ளூர் சந்தைகளுக்கு வழங்கப்படுவதற்காக)

Loading...