UAE Tamil Web

அமீரக ரெசிடென்சி விசா இருக்கா… நீங்களும் அமீரகம் வரலாம் – ஆனால் இந்த விதிமுறையை மறந்துடாதிங்க…!

Airport

ஒருவழியாக இந்தியர்களுக்கு மாதக்கணக்கில் பூட்டப்பட்ட தனது கதவுகளை அமீரகம் திறந்திருக்கிறது. ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்த பயணத்தடையால் இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், உகாண்டா, நைஜீரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் அமீரகம் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமீரக தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தடையை விலக்கியிருக்கிறது. அதன்படி, மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் வர ICA விடம் விண்ணப்பிக்கலாம். தடுப்பூசி சான்றிதழை பயணிகள் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி எடுக்காவிட்டாலும் அமீரகம் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவோர் யார் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் உட்பட அமீரக சுகாதாரத்துறையில் பணிபுரிபவர்கள்.
  • அமீரக கல்வி அமைப்புகளில் பணிபுரிபவர்கள்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்.
  • அமீரக மாணவர்கள்
  • மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்ப விரும்புபவர்கள். ஆனால் அவர்களிடத்தில் செல்லுபடியாகும் விசா இருத்தல் வேண்டும்.
  • பெடரல் மற்றும் உள்ளூர் அரசுகளில் பணிபுரிபவர்கள்.

அமீரகம் திரும்பும் அனைவரும் கட்டாயம் அமீரக அடையாள மற்றும்  குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) ஒப்புதல் பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

  • பயணிகள் அனைவரும் தங்களது பயண நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா PCR பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
  • புறப்பாட்டிற்கு முன்னர், ரேபிட் டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும்.
  • அமீரகம் வந்திறங்கியதும் PCR டெஸ்ட் மற்றும் குவாரண்டைன் ஆகிய நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.
  • தங்களது பயண தேதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் இரண்டாவது டோசை பெற்றிருக்கவேண்டும்

முன்னதாக குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டுமே பயணத்தடையில் விலக்கு அளிப்பதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா வைத்திருப்போரும் அமீரகம் வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Airport
87 Shares
Share via
Copy link
Powered by Social Snap