அமீரகத்தில் அடுத்து வரும் சில நாட்களில் பலத்த காற்றுடன் குளிர்ந்த வானிலை நிலவும் என்பதால், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
“இன்று சில இடங்களில் மூடு பனி உருவாகும் எனவும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், வெப்பநிலை குறையும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது”.
“மாலையில் வடமேற்கு திசையில் இருந்து மிதமான காற்று வீசும் எனவும், அதன் வேகம் 15-25 மணிக்கு 40 கிமீ/மணியை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலையில் அரேபிய வளைகுடாவில் கடல் மிதமானது முதல் கொந்தளிப்பாக இருக்கும். அதே போல், ஓமனில் இரவில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.
வெள்ளி மற்றும் சனி பகலில் குளிர்ச்சியாகவும் இரவில் குளிராகவும் இருக்கும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் சில நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
வடமேற்கு திசையில் காற்றின் வேகம் மணிக்கு 30-45 கிலோ மீட்டரிலிருந்து அதிகபட்சமாக 65 மீட்டராக இருக்கும். இதனால் காற்று தூசி மற்றும் மணலை அள்ளி வீசும். இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும்.
“அரேபிய வளைகுடாவில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பனிமூட்டம் உருவாக வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சில உள் பகுதிகளில் காலையில் ஈரப்பதமாக இருக்கும்.குறிப்பாக சில கடலோரப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
