ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்துடன் கொண்டாட புதிய பொழுதுபோக்கு இடம்..!

family entertainment destination
UAE to get new family entertainment destination

குடும்பத்தை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு வளாகமான Madar-இன் முதல் கட்டம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று ஷார்ஜாவை தளமாகக் கொண்ட சொத்து மேம்பாட்டு நிறுவனம் அராடா (Arada) அறிவித்துள்ளது.

தற்போது ஷார்ஜாவில் கட்டுமானத்தில் உள்ள இந்த பொழுதுபோக்கு வளாகம், 24மீ சதுர அடி மெகா-சமூகமாக அல்ஜாடாவின் (Aljada) மையத்தில் அமைந்துள்ளது. இந்த திட்டம் சுமார் 600,000 சதுர பரப்பளவை கொண்டது.

இது சஹா ஹதிட் (Zaha Hadid) கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 5,000க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 800 கார்களுக்கான இடங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

அராடாவின் தலைவரான ஷேக் சுல்தான் பின் அகமது அல் காசிமி கூறுகையில், “குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் ஊக்குவிக்கும் மற்றும் ஈடுபடுத்தும் சமூகங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்” என்று கூறியுள்ளார்.

மூன்று கட்டங்களுக்கு மேல் திட்டமிடப்பட்டுள்ள, இந்த மாதர் நிறைவுபெறும் போது 25 கால்பந்துமைதானங்களுக்கு (1.9 மில்லியன் சதுர அடி) மேல் அளவில் பரவியிருக்கும், மேலும் அஜாதாவின் மைய புள்ளியாக இது செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madar பசுமையான இடங்கள், நீர் அம்சங்கள் மற்றும் கோடை மாதங்களில் கூட முழுமையாக நடக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Loading...