UAE Tamil Web

பள்ளி மாணவர்களுக்கு 10 வருடங்களுக்கான கோல்டன் விசா; தங்களது குடும்பத்தையும் UAE அழைத்துவரலாம் – அரசு அறிவிப்பு..!

golden visa

பள்ளிகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு 10 வருடத்திற்கான கோல்டன் விசா வழங்கப்படும் என அமீரக அரசு அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சராசரியாக 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விசா வழங்கப்பட இருக்கிறது. அதேபோல, குறிப்பிட்ட அறிவியல் பிரிவுகளில் 3.75 ஜி.பி.ஏ (GPA) அல்லது அதற்கு சமமான கிரேடு பெற்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கல்லூரி மாணவர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. இந்த விசா இம்மாணவர்களின் குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.

இந்த நடவடிக்கை சிறந்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் முயற்சிகளைப் பாராட்டுவதோடு, திறமையானவர்களை ஊக்கமளிக்கும் அமீரக அரசின் திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்டன் ரெசிடென்சிக்கான விண்ணப்பங்கள் எமிரேட்ஸ் பள்ளிகள் ஸ்தாபனம் (Emirates Schools Establishment) மூலம் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

golden visa
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap