UAE Tamil Web

அமீரகத்திலிருந்து இந்தியா செல்வதற்கான பயண விதிமுறைகளை எளிமையாக்கிய இந்திய அரசு..!

Airport (2)

வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான அட்டை வைத்திருப்போர் இந்தியா திரும்புவதற்கான பயண நடைமுறைகளை இந்தியரசு எளிமையாக்கியுள்ளதாக அபிதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்,” OCI அட்டைதாரர்கள் இந்தியா செல்கையில் தங்களுடைய OCI கார்டுடன் இணைக்கப்பட்ட பழைய பாஸ்போர்ட்டை இனி எடுத்துச்செல்ல வேண்டாம். அதேவேளையில் புது பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல OCI கார்டுகளைப் புதுப்பிக்க தேவையான கால அளவையும் அதிகரித்திருப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. தங்களது OCI கார்டுகளை புதுப்பிக்க விரும்புபவர்களுக்கு டிசம்பர் 31, 2021 ஆம் தேதிவரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இதே அறிவுரையை OCI கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கியுள்ளது.

Airport (2)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap