UAE Tamil Web

பழைய நிலைக்கு திரும்புகிறதா அமீரகம்? நாளை முதல் அமலுக்கு வரும் தளர்வுகள்!

கொரோனா தொற்று அதிகமாக இருந்தபோது அமீரகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு கனிசமாக குறைந்து வருகிறது.  இதன் காரணமாக தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) பிப்ரவரி 15 முதல், அமீரகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக அறிவித்தது.

மாநாடு, ஷாப்பிங் சென்டர்கள், பொழுதுபோக்கு இடங்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் போக்குவரத்து தொடர்புகள் என பல்வேறு துறைகளில் மக்களின் வரத்தை அதிக்கப்படுத்த உள்ளாதாக NCEMA கூறியுள்ளது.

சமூக நிகழ்வுகள்

நாளை முதல், திருமணங்கள், உயிரிழப்பு போன்ற துக்க காரியங்களில் பொதுமக்கள் முழுவதுமாக கலந்துக் கொள்ளலாம்.

சினிமா

அமீரகத்தில் உள்ள திரையரங்குளில் பிப்ரவரி 15 முதல் முழு பார்வையாளர்கள் திறனில் செயல்படலாம்.

விளையாட்டு மைதானங்கள்

AL Hosn ஆப்பிள் கிரீன் பாஸ் முறையை கடைப்பிடித்து வந்தால் விளையாட்டு மைதானங்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதனால் அனைத்து பார்வையாளர்களும் Al Hosn ஆப்பிள் கிரீன் பாஸ்-ஐ பெற்றிருக்க வேண்டும், இல்லாவிட்டால் மைதானத்திற்குள் நுழைவதற்கு 96 மணிநேரத்திற்கு எடுக்கப்பட்ட PCR சோதனையின் நெகட்டிவ் சான்றிழை காண்பிக்க வேண்டும்.

வழிபாட்டு தலங்கள்

இதன்படி, பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களில் இரண்டு மீட்டரில் இருந்து ஒரு மீட்டராக சமூக விலகல் குறைக்கப்பட உள்ளது.

பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவும்

தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் குடியிருப்பாளர்கள் முக கவசங்களை அணிந்து போதுமான சமூக விலகலை கடையப்பிடிக்க வேண்டும், மேலும் மக்கள் பாதுகாப்பிற்காக சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று NCEMA வலியுறுத்தியுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற அமீரக குடியிருப்பாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிரீன் பாஸ்

NCEMA அறிவிப்பின்படி, பல்வேறு பொது இடங்களுக்கு செல்ல Al Hosn ஆப்பிள் கிரீன் பாஸ் வைத்திருப்ப்பது மிக அவசியமாகும்.

21 Shares
Share via
Copy link