39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

சுகாதாரப் பணியாளர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் – அமீரக அரசின் அதிரடி அறிவிப்பு..!

Doctors-covid

கொரோனாவிற்கு எதிரான அமீரகத்தின் போரில் அரசின் கரங்களை வலுப்படுத்தும் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுடைய குழந்தைகளின் கல்விக்கான முழு உதவித் தொகையையும் அரசு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அமைச்சகம் மற்றும் ஃப்ரன்ட்லைன் ஹீரோஸ் ஆஃபிஸ் (Frontline Heroes Office) ஆகியவற்றிற்கு இடையேயான ஹயாக்கும் திட்டத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

அனைத்து நாடுகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்களின் குழந்தைகளுக்கும் முழு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் துவங்கி சுத்திகரிப்பு தொழிலாளர் வரையுள்ள பணியாளர்களின் குழந்தைகளும் இதன்மூலமாக பயன்பெறலாம். பொது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த முழு உதவித் தொகையானது வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பயிலும் சுகாதாரப் பணியாளர்களின் 1,850 குழந்தைகளுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருட கல்வியாண்டு முடியும் வரையில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் பயன்பெற விரும்புவோர் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்களது தகவல்களுடன் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஹயாக்கும்

இந்தக் கொடிய கொரோனா காலத்திலும் மருத்துவப் பணியாளர்களின் அரும்பெரும் செயல்களுக்கு கைம்மாறு செய்யும் வகையில் கல்வி அமைச்சகமும் ஃப்ரன்ட்லைன் ஹீரோஸ் ஆஃபிஸ்-ம் இணைந்து இந்த ஹயாக்கும் திட்டத்தை செயல்படுத்திவருகின்றன.

சுகாதாரப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வியை முடிக்கும் வரையிலும் அவர்களுக்கான கல்விக்கட்டணம், லேப்டாப், போக்குவரத்து செலவு ஆகியவற்றை இந்த உதவித்தொகை ஈடுகட்டும் என கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!