UAE Tamil Web

வரும் சனிக்கிழமை வானத்தில் தோன்ற இருக்கும் “ப்ளூ மூன்” – காணத்தவறாதீர்கள்..!

moon

இந்த வார சனிக்கிழமை (அக்டோபர் 31) அமீரகம் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான பகுதியைச் சேர்ந்த மக்களால் ப்ளூ மூனைப் பார்க்க முடியும் என வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் அரபு ஒன்றியத்துக்கான உறுப்பினர் இப்ராஹீம் அல் ஜர்வான் தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

ப்ளூ மூன் என்றால் என்ன?

ப்ளூ மூனை தமிழில் சொன்னால் நீல நிலவு. ஆனால் சனிக்கிழமை தெரிய இருக்கும் நிலவுக்கும் நீல நிறத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. வழக்கமான அளவைவிட அன்று நிலவு மிகப்பெரியதாகத் தெரியும் அவ்வளவுதான்.

மாதத்திற்கு பொதுவாக ஒருமுறை பௌர்ணமி வரும். ஆனால் இந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமி தோன்ற இருக்கின்றன. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இம்மாதத்தின் முதல் பௌர்ணமி நிகழ்ந்தது. வரும் சனிக்கிழமை இரண்டாம் பௌர்ணமி நிகழ இருக்கிறது.

நிலவு பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. இந்தப் பாதையில் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும். அப்போது நமக்கு நிலவின் அளவு மிகப்பெரியதாகத் தெரியும். இதையே ஆங்கிலத்தில் perigee என்றழைக்கிறார்கள். இந்த நேரத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரம் 356,000 கிலோமீட்டர்களாக இருக்கும்.

குட்டி நிலவு

மைக்ரோ மூன் எனப்படும் குட்டி நிலவு, பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் அதிகரிக்கையில் ஏற்படுவது. அந்நேரத்தில் பூமியில் இருக்கும் நமக்கு நிலவு வழக்கத்தைவிட சிறியதாகத் தெரியும். இதை ஆங்கிலத்தில் apogee என்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான இடைவெளி 406,000 கிலோமீட்டர் தூரமாக இருக்கும்.

மூன்று வருடங்களுக்கு ஒன்று அல்லது இரு முறை மட்டுமே இந்த ப்ளூ மூனை நம்மால் பார்க்க முடியும். ஆகவே மறக்காமல் சனிக்கிழமை அதனை கண்டுகளியுங்கள். தவறவிட்டால் மீண்டும் 3 வருடங்கள் காத்திருக்கவேண்டிவரும்.