UAE Tamil Web

பணமோசடி, வரி ஏய்ப்பு குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கிறது அமீரகம்.! தீர்மானம் வெளியீடு..

tax

அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகார அமைச்சர் மற்றும் அபுதாபி நீதித்துறை தலைவரான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான், பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை நிறுவ தீர்மானம் வெளியிட்டார்.

- Advertisment -

இந்த சிறப்பு நீதிமன்றமானது வழக்கு செயல்முறையை மேம்படுத்துவதற்கும், நியாயமான மற்றும் நேர்மையான நீதி அமைப்பை உருவாக்குவதற்கும், நீதித்துறையின் மூலோபாய முன்னுரிமையின்(strategic priority)கட்டமைப்பின் கீழ் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி நீதித்துறையில் பணியாற்றும் அதிகாரியான யூசஃப் சயீத் அல் அஃப்ரி இது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சிறப்பு நீதிமன்றத்தை நிறுவுவது அபுதாபியின் நீதி அமைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஆதரிக்கும் என்றார்.

பணமோசடி, வரி ஏய்ப்பு தொடர்புடைய வழக்குகளின் சரியான நேரத்தில் தீர்ப்பை உறுதி செய்வதிலும், தொடர்புடைய நீதிபதிகளின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதிலும் சிறப்பு நீதிமன்றம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் மேற்கண்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச அளவில் அமீரகத்தின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும் என்றும் யூசஃப் கூறியுள்ளார்.

பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகளை அபுதாபி நீதித்துறை ஏற்பாடு செய்ய உள்ளது.