UAE Tamil Web

அபுதாபி இந்துக்கோவில் சிற்பங்களைப் பார்த்து பிரம்மித்துப்போன அமீரக அதிகாரிகள்..!

abudhabi mandir

அபுதாபியில் கட்டப்பட்டுவரும் இந்து கோவிலுக்காக இந்தியாவில் செதுக்கப்பட்டு அபுதாபி வந்தடைந்த இளஞ்சிவப்பு நிற சிற்பங்களை அமீரக அதிகாரிகள் பார்த்து வியந்திருக்கிறார்கள்.

அபுதாபி சமூக மேம்பாட்டுத்துறையின் தலைவர் டாக்டர். முகைர் அல் கைலி அபுதாபியில் கட்டப்பட்டுவரும் இந்துக்கோவிலை நேரில்சென்று பார்வையிட்டார். பொறியியல் மற்றும் அதிசிறந்த கட்டிடக்கலையின் பாலமாக இந்த கட்டுமானம் திகழ்வதாக அப்போது அவர் குறிப்பிட்டார். மேலும் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் கற்கள் மற்றும் பிற பொருட்களின் தரம் குறித்து அவர் ஆச்சர்யப்பட்டார்.

“சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குவதற்கான அமீரகத் தலைமையின் திட்டத்தை முன்னெடுக்கும் இந்தத் துறையின் எண்ணங்களை BAPS இந்து கோவில் பிரதிபலிக்கிறது” என அபுதாபி சமூக மேம்பாட்டுத்துறை புகழாரம் சூட்டியுள்ளது.

அபுதாபியில் கட்டப்பட்டுவரும் இந்துக்கோவில் குறித்த சுவாரஸ்ய தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

abudhabi mandir
0 Shares
Share via
Copy link