UAE Tamil Web

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு tourist visaவில் வந்த இந்தியரா நீங்க? விசா expiry ஆகியும் வெளியேறாமல் இருந்தால் அபராதம் மட்டும் தான் தெரியுமா? இந்த தொகையை மட்டும் கட்டினால் ஈஸியாக இந்தியா திரும்பலாம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் சுற்றுலா விசாவில் வந்து கூடுதலாக இருக்கும் நாட்களுக்கு அபராதமாக ஒரு தொகையை நீங்கள் கட்ட வேண்டும் என்பதை அரசு அறிவுறுத்தியிருக்கிறது. சுற்றுலா விசாவில் வந்து தங்கிச் செல்லும்போது கூடுதல் நாட்களுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும்?

உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நீங்கள் சுற்றுலா விசாவில் வர முடியும். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து விசா வாங்கிக் கொள்ளலாம். குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிளம்பும் முன்னரே விசா வாங்கிக் கொண்டு வர வேண்டும். இந்த வகை விசாக்களில் வரும்போது குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே அமீரகத்தில் இருக்க முடியும். அதேநேரம், அப்படியான சுற்றுலா விசாவில் வரும் நீங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு நீங்கள் உரிய அபராதம் செலுத்தினால் போதுமானது என்கிறார்கள் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள்.

சுற்றுலா விசாக்கள் எனப்படும் டூரிஸ்ட் விசாக்கள் வாயிலாக ஐக்கிய அரபு அமீரகம் வரும் பயணிகளுக்குக் குறிப்பிட்ட நாட்கள் அனுமதி உண்டு. பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் கூடுதலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்க நேரிட்டால், அதுபற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்தினால் போதுமானது. நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேற அவுட் பாஸ் முக்கியமானது. கூடுதல் நாட்கள் தங்கியிருக்கும் நிலையில், அபராதம் செலுத்தினால் மட்டுமே இந்த அவுட் பாஸ் உங்களுக்குக் கிடைக்கும். குறிப்பாக நீங்கள் கூடுதல் நாட்கள் தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நீங்கள் வெளியேற வேண்டிய குறிப்பிட்ட நாளுக்கு சில நாட்கள் முன்னரே இதைக் குறிப்பிட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

200 முதல் 300 திர்ஹாம் அபராதமாக செலுத்தி உங்களுக்கான அவுட் பாஸை சுற்றுலாப் பயணிகள் உறுதி செய்யலாம் என்கிறார்கள் ஐக்கிய அரபு அமீரக குடியேற்ற அதிகாரிகள். இதுகுறித்து இந்தியரான ரஞ்சித் கூறுகையில், `நான் குறிப்பிட்ட விசிட் விசாவில் குறிப்பிட்ட காலத்தை விட கூடுதலாக இரண்டு நாட்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருக்க நேரிட்டது. அதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய முறையில் தகவல் தெரிவித்தோம். அதேபோல், 240 திர்ஹாம் கூடுதலாகக் கட்டச் சொன்னார்கள். அதைக் கட்டியபிறகே எக்ஸிட் விசா கிடைத்தது’ என்ற தகவலைப் பகிர்ந்தார்.

அதேபோல், அவுட் பாஸ் வாங்கிய பிறகு நிச்சயமாக ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். ஒரு டிராவல் ஏஜென்ஸி மூலம் யு.ஏ.இ வந்த ஒரு நபர் ஏற்கனவே, தனது விசா காலத்தைத் தாண்டியும் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு இங்கே வேலை கிடைத்த நிலையில் உரிய விசா வேண்டி விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதை ஐக்கிய அரபு அமீரக விசா அதிகாரிகள் ஏற்கவில்லை. காரணம், உரிய முறையில் அவரது விண்ணப்பம் அமையவில்லை. அதேபோல், எக்ஸிட் விசா கிடைத்துவிட்டால் வெளியேறிய பிறகே நாட்டுக்குள் ஒருவர் திரும்ப வர முடியும் என்பது முக்கியமானது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap