UAE Tamil Web

காலாவதியான அமீரக சுற்றுலா விசாக்களின் செல்லுபடிக்காலம் நீட்டிப்பு..!

NAT-UAE-VISA

அமீரகத்தில் டிசம்பர் 19, 2020 – ஜனவரி 15, 2021 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் காலாவதியான சுற்றுலா விசாக்களின் செல்லுபடிக்காலம் ஜனவரி 26 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆணையத்தின் தலைமை இயக்குனரகத்தின் (GDRFA) அழைப்பு மையம் (அமர் மையம்) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதை முன்னிட்டு, பல நாடுகள் மீண்டும் தங்களது எல்லைகளை மூடின. இதனைக் கருத்தில்கொண்டு டிசம்பர் 27 ஆம் தேதியன்று காலாவதியான சுற்றுலா விசாக்கள் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 1 மாதகாலம் நீட்டிப்பதாக அறிவித்தார் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இதனையொட்டியே தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

டிசம்பர் 19 ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியான சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்கள் www.amer.ae என்ற இணைய முகவரியின் மூலமாக தங்களுடைய விசாவின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் அருகில் உள்ள அமர் மையங்களுக்குச் செல்லலாம்.