UAE Tamil Web

துபாய் : சாலை விபத்தால் ஸ்தம்பித்த சாலை – மாற்று வழிகளில் செல்ல காவல்துறை வலியுறுத்தல்..!

traffic

துபாய்: சாலையில் நேர்ந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்திருக்கிறது. இதன் காரணமாக மக்கள் மாற்று வழிகளில் செல்லுமாறு துபாய் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

அல் ரேபட் சாலையில் விமான பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்திற்கு சற்று தூரத்தில் விபத்து நேர்ந்திருப்பதாக துபாய் காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

இதன்காரணமாக மக்கள் மாற்றுப் பாதைகளில் செல்லுமாறும், கவனமுடன் வாகனங்களை இயக்குமாறும் வாகனவோட்டிகளை துபாய் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.