துபாய் சர்வதேச விமான நிலையத்தின் 3 வது டெர்மினலுக்குச் செல்லும் சாலையில் இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வாகனவோட்டிகள் கவனமுடன் பயணத்தைத் தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” துபாய் விமான நிலையத்தின் 3 வது டெர்மினலுக்குச் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே வாகனவோட்டிகள் விவேகத்துடன் வாகனங்களை இயக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
#TrafficUpdate | 8:55#Accident on Airport Rd towards Terminal 3, resulting in traffic delays. Please be extra cautious. pic.twitter.com/xXZ2wRkrUC
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) September 26, 2021
