UAE Tamil Web

துபாய்: ஷேக் சயீத் சாலையில் தீப்பிடித்து எரிந்த வாகனம் – போக்குவரத்து பாதிப்பு..!

ROAD

துபாய்: ஷேக் முகமது பின் சயீத் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனத்தால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து துபாய் காவல்துறை வாகனவோட்டிகளை எச்சரித்துள்ளது.

ஷார்ஜா செல்லும் வழியில் அல் இலாயிஸ் மேம்பாலத்தைத் தாண்டி இந்தக் கார் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.

துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளப்படி இன்று காலை 10:14 மணிக்கு இந்த தீவிபத்தானது நிகழ்ந்திருக்கிறது.

ஆகவே, வாகனவோட்டிகள் மாற்று வழிகளில் பயணம் மேற்கொள்ளுமாறும் சாலை விதிகளை மதித்து செயல்படுமாறும் துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

ROAD
0 Shares
Share via
Copy link