UAE Tamil Web

வெளிநாடுகளில் இருந்து அமீரகம் வருகிறீர்களா.? 3 முக்கிய விமான நிலையங்களில் பின்பற்றப்படும் விதிமுறைகள் (குவாரண்டைன் முதல் PCR சோதனை வரை) உங்கள் கவனத்திற்கு..

DXB

ஒரு பக்கம் கொரோனா வழக்குகள் அதிகரித்தாலும் கடுமையான கோவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்காக அமீரகத்தின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திலுள்ள 3 முக்கிய விமான நிலையங்கள் குவாரண்டைனுக்கான தேவைகள் முதல் பி.சி.ஆர் சோதனை விதிகள் வரை வெவ்வேறு நடைமுறைகளை கொண்டுள்ளன. அதன்படி வெளிநாடுகளில் இருந்து அபுதாபி, துபாய் அல்லது ஷார்ஜா விமான நிலையங்களுக்கு வருவோருக்கான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபி விமான நிலையம் வருவோர் கவனத்திற்கு..

தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள குடியிருப்பாளர்கள் அபுதாபி ஏர்போர்ட்டுக்கு(AUH) வந்தவுடன் தனிமைப்படுத்த்தி கொள்ள தேவையில்லை. எனினும் அவர்கள் அபுதாபி வந்தடைந்ததிலிருந்து 6-வது நாளில் கோவிட் -19 பி.சி.ஆர் பரிசோதனை எடுக்க வேண்டும்.

அதேபோல நீங்கள் கிரீன் நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வந்தால் நீங்கள் உங்களை தனிமைப்படுத்த்தி கொள்ள தேவையில்லை. சமீபத்திய கிரீன் நாடுகளின் பட்டியலை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள். மேலும் உங்கள் வருகையின் 6-வது மற்றும் 12-ஆம் நாளில் நீங்கள் கோவிட் -19 பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும். நீங்கள் கிரீன் பட்டியலில் இல்லாத வேறு எந்த நாட்டிலிருந்தாவது பயணம் செய்து அபுதாபி விமான நிலையம் வந்தீர்கள் என்றால், நீங்கள் வீட்டிலோ அல்லது ஒரு ஹோட்டலிலோ 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

அதிக தொற்று ஆபத்து இருப்பதாக கருதப்படும் நாட்டிலிருந்து நீங்கள் பயணம் செய்து அபுதாபி வந்துள்ளீர்கள் என்று அமீரக அதிகாரிகள் கருதினால், நீங்கள் அரசு ஏற்பாட்டில் குவாரண்டைன் செய்யப்படுவீர்கள். குவாரண்டைன் இருப்பவர்கள் AUH-ல் அதிகாரிகள் வழங்கும் கைப்பட்டையை அணிய வேண்டும்.

பயணிகள் அமீரகம் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் கோவிட் -19 பி.சி.ஆர் சோதனை செய்திருக்க வேண்டும். செக் – இன் செய்ய எதிர்மறை சோதனை முடிவுகளின் பிரிண்ட் அவுட் தேவை. AUH-ல் தரையிறங்கும் அனைத்து பயணிகளும் கூடுதல் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். குடியிருப்பாளர்கள் அமீரகத்தில் நுழைவதற்கான தங்கள் நிலையை சரிபார்க்க uaeentry.ica.gov.ae வெப்சைட்டை பார்வையிடலாம். ஒருவேளை நீங்கள் அபுதாபி வழியாக துபாய்க்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளாக இருந்தால், உங்களிடம் அபுதாபி சுற்றுலா விசா இருக்க வேண்டும். துபாயில் வழங்கப்படும் சுற்றுலா விசாக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினவில் கொள்ளுங்கள். அபுதாபி விமானநிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் தொடர்பு தடமறிவதற்கான AlHosn பயன்பாட்டை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

துபாய் விமான நிலையம் வருவோர் கவனதிற்கு..

அனைத்து அமீரக குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் GCC நாடுகளை சேர்ந்த குடிமக்கள் பயண நேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் கோவிட் -19 பி.சி.ஆர் சோதனை செய்திருக்க வேண்டும். பயணிகள் தங்களது நெகட்டிவ் சோதனை முடிவை துபாய் விமான நிலையம் வந்தவுடன் அச்சிட்ட சான்றிதழ்(printed certificate) வடிவத்தில் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் குறிப்பாகஆங்கிலம் அல்லது அரபியில் இருக்க வேண்டும். கையால் எழுதப்பட்ட சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

சில பயணிகள் வருகையின் போது கூடுதல் சோதனைக்கு உட்பட வேண்டியிருக்கும். 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மிதமான முதல் கடுமையான குறைபாடுகள் உள்ள பயணிகளுக்கு பி.சி.ஆர் சோதனை தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புறப்படும் நாடுகளில் இருந்து அமீரக குடிமக்கள் பி.சி.ஆர் சோதனை எடுக்க தேவையில்லை என்றாலும், அவர்கள் DXB-ஐ வந்தடைந்தவுடன் அவர்களுக்கு பி.சி.ஆர் சோதனை செய்யப்படும்.

அனைத்து துபாய் குடியிருப்பாளர்களும் DXB-க்கு திரும்பும் முன் GDRFA-விடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். அதே போல பிற எமிரேட்களில் வசிக்கும் விசா வைத்திருப்பவர்கள் DXB-க்கு திரும்பும் முன் ICA -விடம் ஒப்புதல் பெற வேண்டும். DXB-க்கு வரும் அனைத்து பயணிகளும் கோவிட் -19 DXB App-ஐ டவுன்லோட் செய்து அதில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.

ஷார்ஜா விமான நிலையம் வருவோர் கவனத்திற்கு..

வெளிநாடுகளில் இருந்து ஷார்ஜா விமான நிலையம்(SHJ) வரும் அனைத்து பயணிகளும் பயண நேரத்திற்கு 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டநெகட்டிவ் பி.சி.ஆர் சோதனை முடிவை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் SHJ-க்கு வந்த பிறகு மற்றொரு பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த சோதனை முடிவு வரும் வரை ஷார்ஜா வரும் அனைத்து பயணிகளும் அவர்கள் தங்குமிடத்தில் தங்களை சுய தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

சோதனை முடிவு பாசிட்டிவாக இருந்தால், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். பயணிகள் அல்லது அவர்களின் ஸ்பான்சர்கள் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு ஆகும் செலவுகளை ஏற்க வேண்டும். SHJ மூலம் அமீரகத்திற்குள் நுழைய அனைத்து குடியிருப்பாளர்களும் முன் ஒப்புதல்கள் ஏதுமின்றி அனுமதிக்கப்படுகிறார்கள்.

SHJ வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சர்வதேச சுகாதார காப்பீடு(international health insurance) இருக்க வேண்டும். தொடர்பு கண்காணிப்பு நோக்கங்களுக்காக அவர்கள் உள்ளூர் அமீரக மொபைல் தொலைபேசி எண்ணையும் கொண்டிருக்க வேண்டும். இதற்காக வருகை பி.சி.ஆர் சோதனை மண்டலங்களில்(arrival PCR testing zones.) சிம் கார்டுகள் கிடைக்கின்றன.

DXB
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap