UAE Tamil Web

அப்பாடா.. இனி அபுதாபி வருபவர்களுக்கு குவாரண்டைன் தேவையில்லை..! ஆனால் இதெல்லாம் கட்டாயம்..!

AIRPORT

கடந்த ஒரு வருட காலமாக வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வருவோர் கண்டிப்பாக குவாரண்டைன் இருத்தல் வேண்டும் என்ற விதிமுறை கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நடைமுறையை அதிரடியாக மாற்றியுள்ளது அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம்.

வெளிநாடுகளில் இருந்து அபுதாபி வருவோருக்கான புதிய நடைமுறைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது செப்டம்பர் 5 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

தடுப்பூசி எடுத்துக்கொண்ட மற்றும் எடுக்காத பயணிகள் அனைவரும் தங்களது பயண நேரத்திற்கு 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும்.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் விமான நிலையம் வந்திறங்கியதற்குப் பின்னால் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட கிரீன் பட்டியலில் இல்லாத பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகள் வருகையின் போது பிசிஆர் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய 4 மற்றும் 8 வது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Alhosn அப்ளிகேஷனில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி எடுத்துக்கொண்ட அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பயணிகள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறு மற்றும் ஒன்பதாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்கள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். பத்து நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஒன்பதாவது நாள் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

AIRPORT
24 Shares
Share via
Copy link