UAE Tamil Web

முக்கியச் செய்தி: ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இந்தியா – அமீரகம் இடையே விமானங்கள் இயக்கப்படாது – இண்டிகோ அறிவிப்பு..!

COVID-19: Airline employee died

இந்தியாவின் பிரபல விமான நிறுவனமான இண்டிகோ வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையில் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு விமானங்களை இயக்காது என அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “விமான இயக்கத்தில் சில சிக்கல்கள் இருப்பதால் ஒரு வாரத்திற்கு அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களையும் ரத்து செய்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.

இண்டிகோ பயணிகள் சிலர் அமீரக அரசு விதித்திருந்த பயண விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்திருப்பதாக தெரிகிறது.

இருப்பினும் “மீண்டும் சேவைகளைத் துவங்கியவுடன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி அளித்தல் அல்லது வேறு டிக்கெட்டுகளை வழங்குதல் போன்ற உதவிகளை கண்டிப்பாக செய்வோம்” என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19: Airline employee died
16 Shares
Share via
Copy link