அஜ்மானில் உள்ள அல் ஹிக்மா தனியார் பள்ளியில் படித்துவரும் ஜோர்டானைச் சேர்ந்த 3 சகோதரிகளுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகையை வழங்குவதாக உச்ச சபையின் உறுப்பினரும் அஜ்மானின் ஆட்சியாளரும் அஜ்மான் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி அறிவித்துள்ளார்.
இந்த சகோதரிகளின் ஒருங்கிணைந்த சராசரி மதிப்பெண் 98.5% ஆகும். இதனையறிந்த அஜ்மான் ஆட்சியாளர் அச்சகோதரிகளுக்கு கல்வி உதவித்தொகையினை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
View this post on Instagram
இதுகுறித்துப் பேசிய அவர்,” அறிவியல் மற்றும் நாளைய உலகின் தங்களுடைய பங்களிப்பை செலுத்தவல்ல மாணவர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதன்மூலம் அவர்கள் இந்த நற்தேசத்தின் முன்னேற்றத்தில் பங்களிப்பு செய்யமுடியும்” என்றார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதை சமைக்கும் தேர்ச்சி பெற்ற, திறமை வாய்ந்த மாணவர்களை ஆதரிக்கும் பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய முயற்சிகளை தான் வணங்குவதாகவும் அஜ்மான் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல சமுதாயத்தின் தூணாக கல்வி விளங்குவதாக ஷேக் கலீபா குறிப்பிடுவது முற்றிலும் உண்மை எனக் குறிப்பிட்ட அஜ்மான் ஆட்சியாளர் அமீரகத்தில் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்தார்.