இந்தியா – பாகிஸ்தான் கடல் பரப்பில் உருவான ஷாஹீன் புயல் ஓமானில் கரையைக் கடக்க இருக்கிறது. மணிக்கு 65 – 115 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இப்புயல் அமீரகத்தின் கிழக்குக் கடற்கரையோரங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு புயல் காரணமாக தாழ்வான கடல் பகுதிகளில் அலையானது உயர்ந்து அடிக்கும். நாளை மதியம் மற்றும் மாலை நேரங்களில் நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கனமழை பெய்யலாம். இது பள்ளத்தாக்குகள் மற்றும் சரிவான இடங்களில் திடீர் வெள்ளத்தைத் தோற்றுவிக்கக்கூடும் என அமீரக தேசிய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
24 மணிநேரத்திற்குள் இப்புயல் வகை 1 ஆக மாற்றமடையும் என நேற்று எச்சரிக்கையானது விடப்பட்டிருந்தது. பொதுமக்கள் உள்ளூர் அரசு விடுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— المركز الوطني للأرصاد (@NCMS_media) October 1, 2021
திடீர் வெள்ளம் ஏற்படும் இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும் தேவையின்றி வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஓமான் கடல் தீவிர முதல் மிகத் தீவிரமான சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
