உம் அல் குவைனில் கோர விபத்து.! ஒருவர் பலி.! மற்றொருவர் பலத்த காயம்.!

Truck-container-falls-on-minibus-killing-driver_1702b5cbb49_large

உம் அல் குவைனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (February 09 2020) மாலை ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் பாகிஸ்தான் ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்தார் மற்றும் அவரது இலங்கை பயணி பலத்த காயமடைந்தார்.

உம் அல் குவைனின் அல் அக்ரான் தெருவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
லாரி மீது சரியாக கன்டைனர் பொறுத்தப்படாததால், அது மினி பஸ் மீது விழுந்து, பஸ்ஸின் ஒரு பகுதியை முழுவதுமாக நசுக்கியது.

Truck-container falls on mini bus 2

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த விபத்து குறித்து அழைப்பு வந்ததும், உடனடியாக போலீஸ் ரோந்து மற்றும் அம்புலன்ஸுடன் துணை மருத்துவர்களும் விபத்து நடந்த இடத்தை அடைந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக டிரைவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் காயமடைந்த பயணி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார. அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரின் மீது வேகமாக ஓட்டுதல் மற்றும் கன்டைனரை சரியாக பொறுத்த தவறியது ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக UAQ போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Loading...