UAE Tamil Web

முக்கியச் செய்தி: அமீரகத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் – உறுதிபடுத்திய அரசு – அதிர்ச்சியில் மக்கள்..!

EARTHQUAKE

அமீரகத்தில் திப்பா அல் புஜைராவில் இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தேசிய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திப்பா அல் புஜைராவில் இன்று (மே 24) அதிகாலை 4.54 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.1 ஆகப் பதிவாகியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே இடத்தில் காலை 7.24 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆகப் பதிவாகியுள்ளது.

EARTHQUAKE
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap