UAE Tamil Web

இரண்டு இந்தியர்களுக்கு 10 வருடத்திற்கான கோல்டன் விசாவை வழங்கிய அமீரக அரசு..!

indian doctor

புஜைராவில் வசித்துவரும் பல் மருத்துவரான டாக்டர்.முகமது சலீம் அபூபக்கர் மற்றும் அஜ்மானைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் டக்டர்.ஜிஜோ பிளசன் ஆகியோருக்கு 10 வருடத்திற்கான கோல்டன் விசாவை அமீரக அரசு வழங்கியுள்ளது. இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் மருத்துவ சேவை அளித்துவருகிறார். அஜ்மான் யூனிவர்சிட்டி ஆப் சைன்ஸ் & டெக்னாலஜி -யில் 2002 முதல் 2008 வரையில் விரிவுரையாளராக பணியாற்றிய இவர் புஜைரா சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். கடந்த 2018 ஆம் ஆண்டு புஜைராவில் பல்நோக்கு சிறப்பு பல்மருத்துவமனையை இவர் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் துறையில் சிறந்து விளங்கையமைக்காக அபூபக்கருக்கு இந்த விசா வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அவர்,” புஜைரா இயற்கையியல் மற்றும் குடியிருப்புத்துறை இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முபாரக் பின்செனான் அல் தெய்ரி அவர்களது கைகளால் இந்த கோல்டன் விசாவை வாங்கியது மகிழ்ச்சியான தருணமாகும். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அமீரக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எனது நன்றி” என்றார்.

indian ayurvedic doctor
Image Credit: Khaleej Times

கோல்டன் விசாவைப் பெற்ற மற்றொரு மருத்துவரான ஜிஜோ கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 13 ஆண்டுகள் ஆயுர்வேத மருத்துவம் பார்த்தவர். திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் பயின்ற இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு அமீரகம் வந்தார். தற்போது இவர் அஜ்மானில் உள்ள கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவ மையத்தின் (Kottakkal Ayurvedic Medical Centre) மருத்துவர் மற்றும் தலைமை மருத்துவ ஆலோசகராகவும் இருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” கடவுளின் கருணையாலும் பெற்றோரின் ஆசிர்வாதத்தாலும் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் பெருமையாக உணர்கிறேன். பொது சேவையில் மேலும் துடிப்புடன் இயங்கும் வகையில் இத்தகைய பொன்னான வாய்ப்பை வழங்கிய அமீரக ஆட்சியாளர்களுக்கு நன்றி” என்றார்.

indian doctor
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap